வரகரிசி சாதம் செய்முறை - varaguarisi satham seimurai

Owshadham - ஒளசதம்
0

வரகரிசி  சாதம் செய்முறை


தேவையானவை:


  1. வரகரிசி- 250 கிராம்
  2. முந்திரிப்பருப்பு - 50 கிராம்
  3. பாசிப்பருப்பு - 50 கிராம்
  4. மிளகு - 10 கிராம்
  5. சீரகம் - 10 கிராம்
  6. இஞ்சி - 1 துண்டு
  7. பச்சை மிளகாய் - 2
  8. கறிவேப்பிலை - 1 கொத்து
  9. உப்பு - தேவையான அளவு
  10. நெய் - 100 கிராம்
  11. நல்லெண்ணெய் - 50 கிராம்
செய்முறை:

வரகரிசியையும். பாசிப்பருப்பையும் சேர்த்து கால் மணி நேரம் ஊறவைத்து அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய்யில் பாதி விட்டு மிளகு, சீரகம் போட்டு கிளறுங்கள். நன்கு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு போட்டு வதக்குங்கள். முந்திரிப் பருப்பு பொன்னிறமானதும் முக்கால் லிட்டர் தண்ணீர்விட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வரகரிசி+பருப்புக் கலவையை போட்டு 20 நிமிடங்கள் வேக விடுங்கள். இறக்குவதற்கு முன்பு, மீதமிருக்கும் நெய்யைவிட்டு கிளறி இறக்குங்கள். குக்கரில் வைத்தால் ஒரு விசில் விட்டு தீயை அணைத்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.

வரகரிசி மருத்துவ பயன்கள்


“நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு மிகப்பெரும் வரப்பிரசாதம். பசியாற்றும் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் அது வேலை செய்யும். அதனால் தாராளமாக இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்.

சத்துக்கள்


வரகு அரிசியில் இரும்பு, கால்சியம், வைட்டமின்கள், புரதச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து என எல்லாவிதமான சத்துகளும் இதில் இருக்கின்றன. பைட்டிக் அமிலம், மாவுச்சத்து இரண்டும் குறைவாக இருக்கிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடம்புக்கு சக்தியையும் உடனே கொடுக்கும்.
varagu arisi in english varagu rice and diabetes varagu rice recipes in tamil varagu rice upma varagu rice in tamil varagu arisi sadam varagu arisi pongal in tamil varagu rice for weight loss varagu rice calories subramanian varagu varagu rice for weight loss varagu rice wikipedia can diabetics eat millet
kodo millet glycemi,c varagu arisi maruthuva payan, maruthuva gunam, varagu arisi samaiyal seivatthu eppadi. வரகரிசி மருத்துவ பயன்கள், வரகரிசி சமையல் செய்வது எப்படி, வரகரிசி எங்கு கிடைக்கும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !