Thursday, 17 August 2017

புடலங்காய் கட்லெட் - pudalangai cutlet recipes in tamil

தேவையானப் பொருள்கள் :
  1. நீள புடலங்காய் - 1
  2. வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
  3. பொட்டுக்கடலை பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
  4. சீரகத்தூள் - தேவையான அளவு
  5. மிளகுத்தூள் - தேவையான அளவு
  6. இந்துப்பு - தேவையான அளவு
  7. தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி
  8. பீட்ரூட் துருவல் - ஒரு கைப்பிடி
  9. கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு



pudalangai kootu in tamil language pudalangai poriyal recipe in tamil pudalangai fry in tamil pudalangai kulambu in tamil pudalangai gravy pudalangai kootu recipe video  pudalangai in tamil pudalangai varuval recipe, snake gourd recipes in tamil, snake gourd recipes in tamil. snake gourd medicinal uses in tamil snake gourd 65 snake gourd deep fry snake gourd crispy fry pudalangai chili pudalangai deep fry in tamil pudalanga

செய்முறை:

 முதலில் நீளமானப் புடலங்காயை குறுக்குவாக்கில் ஒரு இஞ்ச் அளவுக்கு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கிய புடலங்காயின் வளையத்தில் இருக்கும் விதையை நீக்கி, அதை இந்துப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவுக்கு தேங்காய் மற்றும் பீட்ரூட்டை தனித்தனியாகத் துருவி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துப் பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித் தழை, இந்துப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பூரணம்போலத் தயார் செய்து கொள்ளவேண்டும். இப்போது வளையமாக உள்ள புடலங்காயின் மத்தியில் இந்தப் பூரணத்தை வைத்து நிரப்ப வேண்டும். ஆற்றல்மிகுந்த, வண்ணமயமான, பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் சுவைமிகு 'இயற்கை புடலங்காய் கட்லெட்' தயார்.

புடலங்காய் மருத்துவ பயன்கள்.

இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆண்மை கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்udalangai kootu in tamil language pudalangai poriyal recipe in tamil pudalangai fry in tamil pudalangai kulambu in tamil pudalangai gravy pudalangai kootu recipe video  pudalangai in tamil pudalangai varuval recipe, snake gourd recipes in tamil, snake gourd recipes in tamil. snake gourd medicinal uses in tamil snake gourd 65 snake gourd deep fry snake gourd crispy fry pudalangai chili pudalangai deep fry in tamil pudalangai fry padhuskitchen pudalangai chilli in tamil pudalangai chips புடலங்காய் கட்லெட் செய்முறை விளக்கம், புடலெங்காய் மருத்துவ பயன்கள் புடலங்காய் எப்படி செய்வது, புடல்ங்காய் மருத்துவ குணங்கள். cutlet recipes in tamil,  cutlet in tamil

Read more »

எலுமிச்சை சூப் - lemon soup in tamil

லெமன் சூப் செய்முறை


தேவையானவை


  1. எலுமிச்சம் பழம் – 3
  2. காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர்
  3. பச்சை மிளகாய் – 3
  4. இஞ்சி – சிறிய துண்டு
  5. கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
  6. எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.



செய்முறை:

ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும்.

சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.


எலுமிச்சை சூப் மருத்துவ பயன்கள்


எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமமான பி.எச். அளவுகள்

நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க...

உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.

செரிமானம்

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.
keywords; lemon soup seimurai, elumitchai soop seyvathu eppadi, soup vakaikal, vegital lemon suop, lemon soup in tamil , how to make lemon soup at home in tamil, lemon soup paynakal, maruthuva payankal, gunangal, லெமன் சூப் செய்முறை விளக்கம், வீட்டில் சூப் செய்வது எப்படி? லெமன் சூப் மருத்துவ பயன்கள், மருத்துவ குணங்கள். lemon uses for weight loss in tamil lemon tamil maruthuvam how to use lemon on your face in tamil lemon beauty tips in tamil lemon benefits weight loss in tamil lemon juice recipe tamillemon disadvantages in tamil lemon in tamil meaning

Read more »

ராகி சேமியா செய்முறை - Ragi semiya seimurai

ராகி சேமியா எப்படி செய்வது


தேவையானவை: 

  1. ராகி சேமியா - 200 கிராம், 
  2. மெல்லியதாக, நீளமாக நறுக்கிய கேரட், 
  3. தக்காளி, வெங்காயம், 
  4. முட்டைகோஸ், 
  5. குடமிளகாய் துண்டுகள் (சேர்த்து) - 2 கப், 
  6. இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
  7.  கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு,
  8. முந்திரி, 
  9. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - தலா 10, 
  10. எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


ragi semivathu eppadi, raagi semiya seimurai vilakkam, vegitable semiya, semiya priyani,  ragi semiya sweet ragi semiya puttu how to make ragi semiya at home how to make ragi noodles at home ragi semiya payasam ragi semiya padhuskitchen manna ragi vermicelli recipe ragi vermicelli online vigitable ragi semiya seimurai ராகி சேமியா வெஜ் பிரியாணி செய்முறை விளக்கம்.


செய்முறை: 

ராகி சேமியாவைச் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் காய்கறிகள், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறி எடுத்து கிச்சடிக் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்
ragi semivathu eppadi, raagi semiya seimurai vilakkam, vegitable semiya, semiya priyani,  ragi semiya sweet ragi semiya puttu how to make ragi semiya at home how to make ragi noodles at home ragi semiya payasam ragi semiya padhuskitchen manna ragi vermicelli recipe ragi vermicelli online vigitable ragi semiya seimurai ராகி சேமியா வெஜ் பிரியாணி செய்முறை விளக்கம்.

Read more »

Wednesday, 16 August 2017

குதிரைவாலி கூழ் - kuthiraivali kool

குதிரைவாலி கூழ் செய்முறை - kuthiraivaalii kool


தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 200 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 5,
தயிர் - 1/2 கப்,
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:


முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது இறக்கவும். பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.
kuthiraivali health benefits, kuthiraivali in english, kuthiraivali pongal recipe, kuthiraivali rice upma, kuthiraivali rice dosa, how to cook kuthiraivali rice, kuthiraivali rice idli, kuthiraivali in telugu குதிரை வாலி கூழ் எப்படி செய்வது, குதிரை வாலி மருத்துவ குணங்கள், கூழ் வகைகள், சுகர், குதிரைவாலி பயன்கள், குதிரைவாலி அரிசி சமையல், குதிரைவாலி அரிசி சாதம், குதிரைவாலி அரிசி பயன்கள், குதிரைவாலி அரிசி விலை, குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி தோசை, குதிரைவாலி பொங்கல், குதிரை வாலி கஞ்சி செய்முறை விளக்கம்.

Read more »

கம்மங்கூழ் செய்முறை - kambu kool seivathu eppadi

கம்மங் கூழ் செய்முறை

தேவையானவை:
  1. கம்பு மாவு - கால் கப், 
  2. தண்ணீர் - 1 1/2 கப், 
  3. வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கேரட், 
  4. பீன்ஸ், 
  5. காலிஃபிளவர், 
  6. பட்டை, 
  7. கிராம்பு, 
  8. ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது, 
  9. உப்பு - சுவைக்கு ஏற்ப
கம்பங்கூழ் செய்வது எப்படி, கம்மங்கூழ் செய்வது எப்படி, கம்பு கஞ்சி, கம்பு கூழ் பயன்கள், கூழ் வகைகள், கேப்பை கூழ் செய்முறை, கம்பங்கூழ் செய்முறை, கூழ் நன்மைகள், kambu koozh health benefits, kambu kali recipe in tamil, how to make kambu kali in tamil, kambu koozh raks kitchen, kambu kool in telugu, kambu koozh calories, pearl millet porridge, how to make kambu dosai
கம்மங்கூழ் செய்முறை 
செய்முறை: 
கம்பு மாவில் தண்ணீர், உப்பு கலந்து கொதிக்கவிட வேண்டும். அதில், வெஜிடபிள் ஸ்டாக் விழுதைக் கலக்கி, வேகவைக்க வேண்டும். வெந்ததும் சூடாகப் பரிமாறலாம்.


கம்பு மருத்துவ பயன்:

இதில், இரும்புச்சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்கு மிக நல்ல உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு.


தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
  1. 100 கிராம் கம்பில்,
  2. 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
  3. 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
  4. பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
  5. ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
  6. நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
kambu koozh health benefits, kambu kali recipe in tamil, how to make kambu kali in tamil, kambu koozh raks kitchen, kambu kool in telugu, kambu koozh calories, pearl millet porridge, how to make kambu dosai

Read more »

கோதுமை கஞ்சி செய்முறை - godhumai kanji seimurai

கோதுமை கஞ்சி செய்வது எப்படி ?


தேவையானவை:
  1. கோதுமை ரவை - 1
  2. சின்ன கிளாஸ், 
  3. தேங்காய்ப்பால் - 1 கிளாஸ், 
  4. பச்சைமிளகாய் - 2, 
  5. நறுக்கிய கேரட், 
  6. பீன்ஸ், பட்டாணி - சின்ன கப், 
  7. தண்ணீர், உப்பு - தேவையான அளவு, 
  8. கொத்தமல்லி - சிறிதளவு.

கோதுமை சத்துகள், கோதுமை பயன்கள், கோதுமை மருத்துவ பயன்கள், கோதுமை உணவு வகைகள், கோதுமை மாவு அரைப்பது எப்படி, கோதுமை வகைகள், கோதுமை சாதம், கோதுமை விலை கோதுமை ரவை செய்வது எப்படி, சம்பா ரவை உப்புமா, சம்பா கோதுமை ரவை சமையல், ரவை உப்புமா செய்வது எப்படி, கோதுமை ரவை பொங்கல், கோதுமை ரவை இட்லி, கோதுமை ரவை பயன்கள், சம்பா கோதுமை பயன்கள்
கோதுமை கஞ்சி செய்முறை

செய்முறை: 
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும். அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
கோதுமை கஞ்சி மருத்துவ பயன்;
  • சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.
  • வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
  • கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
  • கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
  • வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
  • கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.
  • இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.
  • சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.
  • மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறைகிறது. கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டுகொள்ளவேண்டிய உணவுதான் கோதுமை.
whole wheat kanji, godhumai maavu kanji, wheat flour kanji recipe, samba godhumai kanji, broken wheat kanji, wheat kanji for babies gothambu kanji kerala, wheat kanji benefits, gothumai kanji seivathu eppadi, kothumai kanji, godhumai kanji in tamil, gothumai ravai kanji, how to make wheat porridge at home, broken wheat porridge recipe, wheat dalia recipe for baby, whole wheat porridge recipe, wheat flour recipes for babies, roken wheat porridge benefits, wheat milk porridge for babies, broken wheat porridge for weight lossகோதுமை சத்துகள், கோதுமை பயன்கள், கோதுமை மருத்துவ பயன்கள், கோதுமை உணவு வகைகள், கோதுமை மாவு அரைப்பது எப்படி, கோதுமை வகைகள், கோதுமை சாதம், கோதுமை விலை கோதுமை ரவை செய்வது எப்படி, சம்பா ரவை உப்புமா, சம்பா கோதுமை ரவை சமையல், ரவை உப்புமா செய்வது எப்படி, கோதுமை ரவை பொங்கல், கோதுமை ரவை இட்லி, கோதுமை ரவை பயன்கள், சம்பா கோதுமை பயன்கள்

Read more »